ஜனாதிபதி நாளை மறுநாள் தனது ராஜினாமா முடிவை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எடுத்த பல தீர்மானங்களை தலைகீழாக மாற்றிய அல்லது “மீளப்பெற்ற” ஜனாதிபதி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ரசாயன உரத்தடை, காலத்துக்கு காலம் அமுல்படுத்தப்படும் அவசர சட்டம், காலத்துக்கு காலம் ஊரடங்குச் சட்டம், பல தடவைகள் வாபஸ் பெறப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உள்ளிட்ட கோத்தபாய ராஜபக்சவின் தீர்மானங்கள் தலைகீழாக மாறுவது உலக சாதனையாகக் கூட இருக்க முடியும்.
தற்போது அவர் பதவி விலகுவதற்கான திகதியை அறிவித்துள்ளார். அது நாளை மறுநாள் 13ம் திகதியாகும். நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற போதிலும், ஜனாதிபதி பதவி இருக்க எந்த அவகாசமும் இல்லை. ஆட்சியில் அவருக்கு இருந்த தார்மீக சக்தி ஏற்கனவே அவரது காலடியில் இருந்து பிடுங்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் தனது ராஜினாமா குறித்து சபாநாயகர் மற்றும் பிரதமரிடம் தனது உடன்பாட்டை தெரிவித்தாரே தவிர இன்னும் எழுத்துமூலம் பதவி விலகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply