சர்வ கட்சி ஆட்சி தொடர்பில் நேற்று பல சுற்றுப் பேச்சு

சர்வ கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் கொழும்பின் புற நகர்ப் பகுதியில் நேற்றைய தினம. பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய சூழலில் கோட்டா ரணில் அரசை நீக்கி சர்வ கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமயில் பேச்சுக்கள் இடம்பெற்றது. இவ்வாறு இடம்பெற்ற பேச்சுக்களின்போது கோட்டா ரணில் அரசு மக்களின் கோரிக்கையின் பெயரில் பதவி விலகி மாற்று அரசை அமைக்க அனைத்து கட்சிகளின் ஆதரவையும. சஜித் பிரேமதாச கட்சிகளின் தலைவர்களிடம் கோரினார் எனத் தெரிய வருகின்றது.

இதேநேரம் ரணில் விக்கிரமசிங்கா பதவி விலக மறுத்தாலும் 113 பேரின் ஆதரவு இருப்பவர் பிரதமராக முடியும. என்பதன் அடிப்படையிலும் ஆதரவு தேடல் முயற்சி இடம்பெற்றது.

இந்த முயற்சி சூம் வழியாகவும் பின்னர் நேரடியாகவும. இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட கட்சிகளில் சில ஆதரவைத் தெரிவித்தபோதும் இரு கட்சிகள் நிபந்தனையை மட்டுமே தெரிவித்ததாகவும் அறிய முடிகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply