வன்னியில் கைது செய்யப்பட்ட நான்கு மருத்துவர்கள் பிணையில் விடுதலை

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட வன்னியில் பணியாற்றிய வைத்திய மருத்துவ தரப்பினர் நால்வர், இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நால்வரையும் 10 லட்சம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி வைத்திய அதிகாரி சி சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி டி பி சண்முகராஜா, இளஞ்செழியன் பல்லவன், மற்றும் கிருஸ்ணராஜா வரதராஜா ஆகியோரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இரகசிய பொலிஸாரின் ஒப்புதலுக்கு அமையவே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியாவில் மட்டும் தங்கியிருக்க வேண்டும், அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரகசியப் பொலிஸாரிடம் சென்று கையெழுத்திட வேண்டும், என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்கள் நால்வருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. .

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொதுமக்களின் இழப்புகள் குறித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தனர் என்பதே இவர்கள் மீது சுமத்தப்பட்டிந்த குற்றச்சாட்டாகும். இதேவேளை இலங்கையின் சட்டப்படி குறித்த நால்வரும் வேறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை கண்டறிய தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply