யாழ்ப்பாணம் வைத்தியசாலைகள் ரூ. 460 மில். செலவில் அபிவிருத்தி

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 460 மில்லியன் ரூபா செலவில் யாழ். குடா விலுள்ள ஆஸ்பத்திரிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்ரசிறி தெரிவித்தார்.ஆளுநர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடங்கலான குழுவினர் சாவகச்சேரி தள வைத்தியசாலை உட்பட்ட அங்குள்ள ஏனைய ஆஸ்பத்திரிகளை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்படி யாழ். போதனா வைத்திய சாலை, சாவகச்சேரி தளவைத்தியசாலை, மானிப்பாய் பிரசவ விடுதி, கரவெட்டி ஆஸ்பத்திரி, இளவாலை மருத்துவ நிலையம் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருவ தோடு மண்டைதீவு, புங்குடுதீவு, ஊர்காவற்றுறை பகுதிகளில் மருத்துவ வசதிகளை மேம் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி தள வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு நிர்மாணப் பணிகள் 80 வீதம் பூர்த்தி அடைந்துள்ளன. இதற்காக 40.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் விநியோகம் மற்றும் மருத்துவ களஞ்சியம் என்பவற்றுக்காக 10 மில்லியன் ஒது க்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் கூறினார்.

இதேவேளை மானிப்பாய் பிரசவ விடுதி 11 மில்லியன் ரூபா செலவில் அமைக்க ப்பட்டு வருகிறது. கரவெட்டி ஆஸ்பத்திரி யின் வெளிநோயாளர் பிரிவு 15 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகி றது. 50 வீத பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இளவாலை மருத்துவ நிலையம் 9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப் பட்டு வருகிறது. இதில் 45 வீத பணிகள் பூர்த்தி பூர்த்தியடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஊர்காவற்றுறை, மண்டைதீவு, புங்குடுதீவு மற்றும் வேலணை ஆஸ்பத்திரிகள் 41 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரை நகரில் மருத்துவர்களுக்கான விடுதி 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. தென்மராட்சி, கொடிகாமம் ஆஸ்பத்திரிகளில் 10 மில்லியன் செலவில் பிரசவ விடுதிகள் அமைக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோப்பாய், அச்சுவேலி, ஆயுர்வேத ஆஸ்பத்திரிகள் 8.2 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு இவற்றுக்கான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.

இதேவேளை வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் தென்மராட்சி, வடமராட்சி, கோப்பாய், வலிகாமம், சண்டிலிப்பாய் ஆஸ்பத்திரிகளின் சுகதார வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளுநர் சந்ரசிறி குறிப்பிட்டார். ஆஸ்பத்திரிகளின் நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஆளுநர் மேற்படி நிர்மாணப் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply