செனல்- 4 வீடியோக் காட்சி போலியானது என்பதோடு அதை வன்மையாக கண்டிப்பதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது
இங்கிலாந்தைச் சேர்ந்த செனல்- 4 என்ற தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய இலங்கைப் படைவீரர்கள் தொடர்பான வீடியோக் காட்சி உண்மைக்குப் புறம்பானதென்றும் போலியாகத் தயாரிக்கப்பட்டதாகுமெனவும் ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது. சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது என்றும் செயலகம் தெரிவித்துள்ளது.
வன்னிபோரின் போது தமிழர்களின் கைகளையும், கண்களையும் கட்டிவைத்து இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்வது போன்ற போலியான கொடூரகாட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. வன்னியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றபோது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல உண்மைக்குப் புறம்பான ஒளிநாடாக்களை தயார்செய்து ஒளிபரப்பிய பிரித்தானியாவை தலைமையாகக்கொண்ட செனல் -4 என்னும் தொலைக்காட்சியாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும் இலங்கை அரசுக்கு எதிரான பொய்யான பல தகவல்களையும், செய்திகளையும் அவர்கள் தொடர்ந்தும் வெளியிடுவதனை நிறுத்தவில்லை. இதன் ஒரு அங்கமாகவே உண்மைக்குப் புறம்பான வீடியோவொன்றை செனல்-4 வெளியிட்டுள்ளது .
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply