நிவாரண கிராமங்களில் இருந்து வெளியேறும் சைவ மத குருமாரை இந்து திணைக்களம் ஏற்பு
வவுனியா-செட்டிக்குளம் நிவாரண கிராமங்களில் இரு ந்த இந்து மத குருமார்களும், கிறிஸ்தவ பாதிரியார்களும் நேற்று விடுக்கப்பட்டுள்ளனர். 177 இந்து குருக்களின் குடும்பங்கள் அடங்கலாக 678 பேரும், ஏழு கிறிஸ்தவ பாதிரியார்களும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுவிப்பதற்கான நிகழ்வு வவுனியா பாது காப்புத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்கள் றிஷாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, அரச அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கொழும்பிலிருந்து சென்ற இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக் கரசன் தலைமையிலான குழுவினர் இந்து குருமார்களைப் பொறுப்பேற்றார்கள்.
இவர்களை வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திலும், கோயில்குளம் சிவன் ஆலயத் திலும் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply