ஜே.ஆர்.ஜெயவர்த்தன பாணியில் கருத்துக் கணிப்பு? – ஜனாதிபதி ஆலோசனை
பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலொன்றை நடத்தாமல், பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான கருத்துக்கணிப்பொன்றை நடத்துவது பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்ஜெயவர்த்தன 1983ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்தாமல் கருத்துக் கணிப்பை நடத்தி 1989ஆம் ஆண்டுவரை ஆட்சிக்காலத்தை அதிகரித்துக்கொண்டார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பாணியில் 2010ஆம் ஆண்டு முன்னர் கருத்துக் கணிப்பொன்றை நடத்தி 2004ஆம்ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடிப்பது பற்றி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம், கருத்துக் கணிப்புபொன்றுக்குச் செல்வதற்கு முன்னர் கலைக்கப்படாமலிருக்கும் 5 மாகாணசபைகளைக் கலைத்து அவற்றுக்கான தேர்தலை நடத்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியிலிருக்கும் ஆதரவை அறிந்துகொள்வது பற்றியும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாகத் தெரியவருகிறது. இந்த நடவடிக்கையானது அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அளவிட்டுக்கொல்லாம் என ஆளும்கட்சியின் தலைவர்கள் கருதுகின்றனர். அதன் பின்னர் தேசிய கருத்துக் கணிப்பொன்றை நடத்துவது சிறந்தது என அவர்கள் கூறியுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை எழுச்சிபெறச் செய்துள்ளது. அரசாங்கத்தின் முன்னேற்பாடுகளைத் தொடர்ந்தே பொதுத் தேர்தலொன்றுக்கு அனைவரும் தயாராக இருக்கவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தது. அதேநேரம், ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியொன்றை அமைப்பதில் முனைப்புக்காட்டிவரும் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு இணைந்து செயற்படவேண்டியுள்ளது.
எனினும், கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்த சில எதிர்ப்பு நடவடிக்கைகள் அதற்கு தோல்வியாகவே அமைந்துள்ளன. மோட்டார் வாகனங்களிலிருந்து ஒலி எழுப்பி, மின்விளக்குகளை எரியவிடும் போராட்டத்தால் அக்கட்சியின் இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வன்சொற்களுக்கு ஆளனமையைத் தவிர வேறு எந்தப் பலனஇயும் கொடுக்கவிலலை. அதன் பின்னர் நடத்தப்பட்ட வீதியில் சட்டி, பானைகளைப் போட்டுடைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது, அது அப்படியே மறக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துல்கொட நியமிக்கப்பட்டமைக்கு எதிராக சபையில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை எந்தவித பலனையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. இவ்வாறு விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையவில்லை.
இவ்வாறானதொரு நிலையில் கருத்துக்கணிப்பொன்றை அரசாங்கம் நடத்துமாயின் அது அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி, எதிர்க்கட்சிக்கும் பாரிய சவாலாகவே அமைந்திருக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply