பிரபாகரன் கடைசி முயற்சி என்ன புதுத்தகவல் வெளியானது
இலங்கை இராணுவத்தால் கொல்லப்படுவதற்கு முன் காட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்வதற்கு பிரபாகரன் முயற்சித்தார் என கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கோகுலன் மாஸ்டர் தொரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்தவருமான கோகுலன் மாஸ்டர்,இலங்கை இராணுவத்தால் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில்,கோகுலன் மாஸ்டர் பல முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டதாக்குதல் நடந்த போது, பிரபாகரனுடன் கோகுலன் மாஸ்டரும் இருந்ததாக இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.
விசாரணையின் போது கோகுலன் மாஸ்டர் தெரிவித்ததாவது கடந்த மே மாதம் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட தாக்குதலை இலங்கை இராணுவம் மேற் கொண்டது.இதனால் இராணுவத்தின் அரணை தகர்த்து, புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்ல பிரபாகரன் முயற்சித்தார். தான் கொல்லப்படுவதற்கு முன்,தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் பேசினார்.அப்போது அவர் நமது கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தால் இலங்கை இராணுவத்தால் நாம் கொல்லப்படுவோம். அது போன்ற சூழ்நிலையில் நமது தனி ஈழக் கனவு பகல் கனவாக போய் விடும் என எச்சரிட்தார்.இருந்தாலும் அவரது முயற்சி வெற்றி அடையவில்லை. கடந்த மே 18ம் தேதி இலங்கை இராணுவத்தால் அவர் கொல்லப்பட்டார் விஸ்வமடு பகுதியை நோக்கி இராணுவம் முன்னேறியபோது,தனது இருப்பிடத்தை பிரபாகரன் மாற்றிக் கொண்டார்.
பதுங்கு குழிக்குள் இருந்தபடி தனது படையினருக்கு கட்டளை பிறப்பித்து வந்தார்.பூநகரி கிளிநொச்சி பகுதிகளை இழந்தவுடன்,தனி நாட்டை அடைவதற்கான முயற்சி 75 சதவீதம் தோல்வி அடைந்து விட்டதாக பிரபாகரன் தெரிவித்தார்.இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமுதாயம் தலையிடும் வரையிலாவது,தொடர்ந்து சண்டையிடுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார் என்று கோகுலன் மாஸ்டர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply