கென்யா அதிபராக பதவியேற்றார் வில்லியம் ரூடோ
ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்றார்.
கென்யாவின் அதிபராக இருந்து பதவி விலகும் உஹுரு கென்யாட்டாவின் துணை அதிபராக வில்லியம் ரூட்டோ இருந்தார். இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த கென்யா சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுக்களை கடந்த வாரம் நிராகரித்தது.
இந்நிலையில், வில்லியம் ரூட்டோ இன்று கென்யாவின் 5-வது அதிபரக பதவியேற்றார். இன்று நடந்த பதவியேற்பு விழாவில் உஹுரு கென்யாட்டாவும் வில்லியம் ரூட்டோவும் கைகுலுக்கி பேசிக் கொண்டது மக்களிடம் மகிழ்ச்சியை எற்படுத்தியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply