உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ ஆயுத உதவி வழங்க அமெரிக்கா திட்டம்
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை சேர்த்து, கூடுதலாக ராணுவ ஆயுத உதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அதன்படி உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரேனிய இராணுவத்திற்கு உதவுவதற்கான இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படும். வெள்ளை மாளிகை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply