பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னர் 100,000 அகதிகள் மீள் குடியேற்றப்படுவார்கள்: அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ்

பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னர் வவுனியா இடைத்தங்கல்; முகாம்களில் தங்கியுள்ள சுமர் 100,000க்கும் மேற்பட்ட பொது மக்களை மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுடுக்கப்படும் என்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து செட்டிக்குளம் மெனிக் பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் 40 வீதமானோரையே இந்த பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னர் விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15000 குடும்பங்களும், மன்னாரைச் சேர்ந்த 6000 குடும்பங்களும் திருகோணமலையைச் சேர்ந்த 3500 குடும்பங்களுமே இந்தத் திட்டத்தின் கீழ் மீள் குடியேற்றப்படவுள்ளனர்.

இத்தொகை மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதன் பின்னர் இடைத்தங்கல் முகாமகளில் தங்கியுள்ள எஞ்சிய பொது; மக்களை பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக் கூடிய இடர்களை வரையறுத்து அதற்கேற்ற வகையில் அவர்களுக்கான நடவழக்கைகளை முன்னெடுக்க முடியும். அந்த நடவடிக்கைகள் இலகுவாகவும் அமையும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply