லிபியாவில் பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

லிபிய தலைநகர் திரிபோலியில் நடைபெறும் அந்நாட்டின் 40வது சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்திருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து தனித்தனியாக இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா அரோயா மற்றும் பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தனித்தனியாக சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதேவேளை, மேலும் வெவ்வேறு நாட்டுத் தலைவர்களை சந்திக்கவும் நேற்று ஏற்பாடாகியிருந்தது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியோ அரோயோவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாகவும் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய ரீதியிலும் போராடுவது தொடர்பாக ஆராயப்பட்டது.

பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பது தொடர்பில் இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.பயங்கரவாதத்தை இலங்கையில் முற்றாக ஒழிப்பதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு வழிகாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பாராட்டினார்.

தோற்கடிக்க முடியாததெனக் கருதப்பட்டு வந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு ஒப்பற்ற தலைவரென ஜனாதிபதி அரோயோ தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமருடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது; இரு நாடுகளுக்குமிடையில் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பு கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டதுடன் அதனூடாக ஏற்படும் இராஜதந்திர உறவுகள் நாடுகளுக்கிடையில் வர்த்தக, பொருளாதார, சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கு காரணமாக அமையுமெனவும் பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொடர்புசாதன தொழில்நுட்பப் பரிமாற்று வேலைத் திட்டமொன்று இரு நாடுகளுக்குமிடையில் செயற்படுத்துவதற்கும் இலங்கையில் செயற்படுத்தப்பட்டு வரும். “ஈ அறிவகம்” (ஈ நெனசல) திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு பாகிஸ்தான் அரசின் மூலம் தகவல் தொழில்நுட்ப வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் இச் சந்திப்பின்போது கவனம் செலுத்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply