உரும்பிராய் அச்செழுவில் பகுதியில் மர்ம வெடிப் பொருள் வெடிப்பு: சிறுவன் பலி இரு சகோதரர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் அச்செழுவில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் மர்மப் பொருள் ஒன்றுடன் மூன்று சிறுவர்கள் விளையாடியபோது, அது வெடித்ததில் 11 வயது சிறுவன் மரணமானார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு சிறுவனும் சிறுமியும் படுகாயமடைந்ததாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் கண்டெடுத்த மர்மப் பொருளைக் கையில் எடுத்து கல்லில் குத்தி அதனை உடைக்க முயன்றபோதே அது வெடித்ததாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அச்செழு குடியேற்றத்திட்டத்தைச் சேர்ந்த சிறிவரதன் லதிகரன் (11) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்த சிறுவனின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் பொலிசாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவத்தில் ஜெகதீஸ்வரன் சாளினி (8), ஜெகதீஸ்வரன் அகிலன் (7) ஆகிய சகோதரர்களே காயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிசார் விகாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply