ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தொடர்கின்றன
இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகொப்டர் நேற்று காலை முதல் காணாமல் போயுள்ளது. ஹைதராபாத்திலிருந்து சித்தூர் நோக்கி பெல் 430 ரக ஹெலிகொப்டரில் இவர் பயணித்த போதே காணாமல் போயுள்ளார். நேற்றுக் காலை 8.35 மணியளவில் ஹைதராபாத்திலிருந்து சித்தூர் நோக்கி இந்த ஹெலிகொப்டர் புறப்பட்ட போதிலும், காலை 9.25 மணி முதல் ஹெலிகொப்டருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நக்ஸலைட்டுக்கள் நிறைந்த நல்லமலை காட்டுப் பகுதியில் ஹெலிகொப்டர் பறந்து கொண்டிருந்த போதே, ராடரிலிருந்து மாயமாக மறைந்துள்ளது. இவர் பயணித்த ஹெலிகொப்டர் மீது நக்ஸலைட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்களா? அல்லது இயந்திரக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டு ஆபத்தில் சிக்கியதா? என்பது தொடர்பில் நேற்று நள்ளிரவு வரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தேடுதலில் இராணுவம், விமானப்படை ஆந்திர முதல்வரைத் தேடும் பணியில் இராணுவமும், விமானப்படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நான்கு இராணுவ ஹெலிகொப்டர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. அதில் மூன்று, பெங்களூரிலிருந்து வந்துள்ளன. இன்னொன்று, ஹைதராபாத்திலிருந்து வந்துள்ளது.
அதேபோல, விமானப்படையின் நான்கு ஹெலிகொப்டர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் 2 சேட்டக் ரக ஹெலிகொப்டர்கள், ஒன்று எம்.ஐ.8, இன்னொன்று துருவ் அட்வான்ஸ் இலகு ரக ஹெலிகொப்டர் ஆகும். இந்த நிலையில், இஸ்ரோவின் உதவியும் தேடுதல் வேட்டையில் கோரப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் உதவியுடன் ரெட்டி பயணித்த ஹெலிகொப்டர் இருக்கும் இடத்தை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இஸ்ரோவின் சிறப்பு விமானம் தேடுதல் வேட்டையில் இணைந்துள்ளது.
முதல்வர் ரெட்டி மாயமாகி இத்தனை மணி நேரமாகியும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் செய்தி பெரும் கலக்கத்தைத் தருவதாக சோனியா தெரிவித்துள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply