சிறைகளை கண்காணிக்க புலனாய்வு பாதுகாப்புப் பிரிவு: மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா
சிறைச்சாலைகளுக்குள் இடம் பெறுவதாக கூறப்படும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்பு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இதன் பரீட்சார்த்த நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான கெனத் பெர்னாண்டோ, இந்த பிரிவுக்கு முழு அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
45 சிறைச்சாலை அதிகாரிகள், ஊழி யர்களைக் கொண்டு இந்தப் புலனா ய்வு பாதுகாப்பு பிரிவு தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், இந்தப் பிரிவின் நடவடிக்கைகளை வெகு விரைவில் நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி. ஆர். சில்வாவின் வழிகாட்டலில் ஆணையாளர்களான ஹப்பு ஆராய்ச்சி மற்றும் லக்ஷ்மன் சில்வா ஆகியோரின் தலைமையில் இந்த பரீட்சார்த்த நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளி லும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. இந்தப் புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எந்தவொரு சிறைச்சாலைக்கும் திடீரென விஜயம் செய்யவும் சிறைக்கைதிகள் மற்றும் அதிகாரிகளை சோதனையிடவும் அதிகா ரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விசேட புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவை நாடளாவிய ரீதியில் நிறுவுவதற்கென ஆயிரம் சிறைச்சாலை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவ தாகவும் அவர் தெரிவித்தார். சிறைச்சாலைக்குள் பாதாள உலக கோஷ்டியி னரின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், சட்ட விரோத செயற்பாடுகள், கையடக்கத் தொலை பேசி மற்றும் போதைவஸ்துக்கள் கைமாறப்படு வதாகவும் குற்றஞ் சாட்டப்படுவதையடுத்தே இத னைக்கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்த பிரிவு நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள் ளதுடன் தற்பொழுது இதன் பரீட்சார்த்த நட வடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறி ப்பிட்டார்.
இந்தப் பிரிவின் பரீட்சார்த்த செயற்பாடுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் இந்தப்புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவு அமைக் கப்பட்டு அதன் செயற்பாடுகளை விஸ்தரித்த பின்னர் கண்டி, காலி, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சேவையை முன்னெடுக்க முடியும் என்றும் கெனத் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார். இந்தப் பிரிவின் செயற்பாடுகளின் மூலம் சிறைச்சாலைக்குள் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை இலகுவாகக்கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவிக்கையில், சிறைச்சாலையில்ஒழுங்கை கடைப்பிடிப்பதற்காக எதிர்காலத்தில் பல கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
அண்மையில் கூட சிறைச்சாலைகளிலிருந்து 18 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியிருந்தோம். நியமிக்கப்பட்டுள்ள புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகள் தமது கடமைகளை சரிவர முன்னெடுப்பார்களென்ற நம்பிக்கை உண்டு எனவும் தெரிவித்தார். செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா நாட்டில் தற்போது 30 ஆயிரம் சிறைக்கைதிகள் இருப்பதாகவும் அவர்களுள் 50 சதவீதமானவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்ஏனையோரில் 251 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களெனவும் தெரிவித்தார். நாட்டில் 03 பிரதான சிறைச்சாலைகளும் 19 விளக்கமறியல்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply