6 மாத ஆய்வு நிறைவு : ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

நாசாவின் 4 விண்வெளி வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். விண்வெளி நிலையத்தில் சுமார் 6 மாத காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள், நேற்று பூமிக்கு திரும்பினர்.

அவர்களின் விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது. விண்கலமானது, விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறிய சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, புளோரிடாவின் ஜாக்சன்வில்லிக்கு அருகில் கடலில் பாராசூட் மூலம் இறங்கியது. பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக, ஸ்பேஸ்எக்ஸ் கடந்த வாரம் வேறு வீரர்களை அனுப்பியது. தற்போது விண்வெளி நிலையத்தில் 3 அமெரிக்கர்கள், 3 ரஷியர்கள் மற்றும் ஒரு ஜப்பானியர் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply