உக்ரைன் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளைச் செய்துவருகின்றன. மேலும் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு ராணுவ ஆதரவை அதிகரிக்க உள்ளது. அதன்படி, ஐரோப்பிய ஒன்றியம் 15,000 உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்களுக்காக 500 மில்லியன் யூரோக்களை கூடுதலாக வழங்க உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் லக்சம்பேர்க்கில் நடைபெறும் கூட்டத்தில் இது தொடர்பான முக்கிய முடிவுகளில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply