ஆந்திர முதல்வரின் சடலம் கருகிய நிலையில் மீட்பு: இன்று இறுதிக்கிரியை
இந்தியாவின் ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகொப்டர் சிதைந்து சுக்கு நூறாகிய நிலையில் மலையுச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்த ஆந்திர முதல்வர் ரெட்டி உட்பட 5 பேரின் உடல்களும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு நேற்று அறிவித்தது. ஹெலிகொண்டரின் சிதைவுகளுக்குள்ளிருந்து முதல்வரின் தலைமை செயலர் சுப்பிரமணியன், தலைமைப் பாதுகாப்பு அலுவலர் ஏ. எஸ். சி. வெஸ்லி, பைலட் எஸ். கே. பாட்டியா, துணை பைலட் எம். எஸ். ரெட்டி ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஐவரினதும் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகொப்டர் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ராமகாந்த் ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதல்வர் பயணம் செய்த ஹெலிகொப்டர் மரம் ஒன்றில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. நலமல்லா வனப் பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் முதல்வர் உள்ளிட்ட 5 பேரின் உடல்கள் மோசமான நிலையில் கண்டெக்கப்பட்டன. ஹெலிகொப்டரின் உடைந்த துண்டுகள் அப்பகுதியில் பரவலாக சிதறிக் கிடந்தன. எனினும், அதன் வால் பகுதி மட்டும் சேதமடையாமல் தனியே உடைந்து கிடந்தது.மீட்புக் குழுவினர் 5வது உடலை கண்டுபிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது என்றார்.
ராஜசேகர ரெட்டியின் இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. மீட்கப்பட்ட உடல்கள் கர்னூலுக்கு கொண்டு வரப்படுகின்றன. முதல்வர் மரணத்தை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் மேலிடமும் உறுதி செய்துள்ளது. மாயமான ஹெலிகொப்டர் கர்னூல் மலை உச்சி பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டதாக இராணுவ விமானப் படை அதிகாரி கூறினார். நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு கிளம்பிய ஹெலிகொப்டர் 9.30 மணிக்கு ரேடியோ தொடர்பை இழந்தது. நல்லமலா வனப் பகுதியில் பறந்து கொண்டிருந்த போதுதான் துண்டிக்கப்பட்டது. ஹெலிகொப்டரில் பயணித்த அதிகாரிகள் யாரிடமும் செயற்கைகோள் போன் இல்லை. இதுவும் நிர்வாகத்தினருக்கு ஹெலிகொப்டரை தேடுவதில் சிக்கலை ஏற்படுத்தியது. கர்னூலுக்கு கிழக்கே 40 மைல் தூரத்தில் உள்ள இப்பகுதியை முதலில் இராணுவ ஹொலிகொப்டர்கள் கண்டுபிடித்தன. கண்டுபிடிக்கப்பட்ட உடன் ஹெலிகொப்டர் எந்த நிலையில் இருந்தது, விமானம் விபத்தில் சிக்கியதா என்ற கேள்விக்கு விமான அதிகாரி முதலில் உறுதியான தகவல் ஏதும் கூற மறுத்து விட்டார்.
துணை இராணுவ கமாண்டோக்கள்: ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகொப்டர் கிடக்கும் பகுதியில் துணை இராணுவ கமாண்டோக்கள் இறக்கி விடப்பட்டனர். கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா – ரோலபெண்டா இடையே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் ஹெலிகொப்டரும் உடல்களும் கிடந்தன.
சிதைந்து போன உடல்கள்: ஹெலிகொப்டர் உருக்குலைந்து கிடந்த இடத்தில் 5 பேரின் உடல்களும் சிதைந்து அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தன. உடல்கள் மீட்கப்பட்டு ஐதராபாத் கொண்டு வரப்படும். பின்னர் ஐதராபாத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் இன்று இறுதிச் சடங்கு சொந்த ஊரில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.
பிரதமர் அவசர ஆலோசனை: ஆந்ர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் உயர் மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சோனியாவும் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தை அடுத்து தமழகத்தில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் ராஜசேகர ரெட்டி மரணமடைந்தது தமிழக மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, கனிமொழி ஆகியோர் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ராஜசேகர ரெட்டியின் மரணத்தை மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார். ராஜசேகர ரெட்டியின் மரணச் செய்தியை ஆந்திர அரசு அறிவித்தவுடன் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது. இந்திய விமானப் படை ஹெலிகொப்டர் உடல்கள் இருந்த இடத்தையும் ஹெலிகொப்டரையும் கண்டுபிடித்தது. காலை 8.35 மணிக்கு ஹொலிகொப்டர் விழுந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டது.
கர்னூரிலிருந்து 48 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள மலைக் குன்றில் ஹெலிகொப்டர் விழுந்திருந்தது. இதையடுத்து மேலும் பல ஹெலிகொப்டர்கள் அங்கு சென்றன. பாரா கமாண்டோக்கள் கயிற்றின் மூலம் கீழே இறங்கி ஹெலிகொப்டரை நெருங்கினர். பின்னர் உடல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல்கள் கருகிப் போயுள்ளன. ஹெலிகொப்டர் 7 பாகங்களாக சிதறியுள்ளது. அந்த இடத்திற்கு டாக்டர்களைக் கொண்டு செல்ல முயற்சி நடக்கிறது. மிகச் சிறந்த முதல்வர், மிகப் பெரிய தலைவர் ராஜசேகர ரெட்டியின் மறைவால் அனைவரும் அதிர்ந்தும் உறைந்தும் போயுள்ளோம் என்றார் ப. சிதம்பரம்.
ஆந்திர முதல்வரின் மரணச் செய்தி கேட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்களும் ஹைதராபாத் விரைந்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி இல்லத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ராஜசேகர ரெட்டியை கண்டுபிடிக்க இந்திய விமானப் படையின் சுகோய் விமானங்கள், இஸ்ரோ விமானம் மற்றும் ,{ இல்லாத விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பலத்த மழை பெய்ததால் நேற்று மாலை 6 மணிக்கு ஹெலிகொப்டர் மூலம் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு மீண்டும் ஹெலிகொப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை தொடங்கியது.
5 ஆயிரம் மத்திய ரிசர்வ் பொலிஸார், ஆந்திர மாநிலத்தின் 6 மாவட்ட பொலிஸார், வன இலாகாவினர் மற்றும் மலை வாழ் இன மக்கள் என சுமார் 25 ஆயிரம் பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஸ்ரீசைலம் ஆற்றில் விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 300 பேர் படகுகளில் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply