ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்த ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தினார். அதில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் பலர் கலந்துகொண்டனர்.அப்போது, இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி கிடைத்தவுடன், அதை மேடையிலேயே ஜோ பைடன் பகிர்ந்து கொண்டார்.

ஆனால், 79 வயதான ஜோ பைடன், ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தினார்.ரிஷி என்பதை ‘ரஷீத்’ என்றும், சுனக் என்பதை ‘சினூக்’ ஹெலிகாப்டரை நினைவுபடுத்தும்வகையில், ‘சனூக்’ என்றும் மாற்றினார். ”ரஷீத் சனூக் இப்போது பிரதமர் என்று செய்தி கிடைத்திருக்கிறது” என்று ஜோ பைடன் கூறினார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ஜோ பைடன் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானார். அவரை கேலி செய்து ‘மீம்ஸ்’கள் வெளியிடப்பட்டன. ”ரிஷி சுனக் பெயரை ஜோ பைடன் கொலை செய்வதை பாருங்கள்” என்று ‘தி ஸ்பெக்டேட்டர்’ என்ற பத்திரிகை கிண்டலடித்தது.

‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒருவர், ”ரஷீத் சனூக் பிரதமரானது அபரிமிதமான சாதனை என்று ஜோ பைடன் கூறுகிறார். அவரது பெயரை கற்றுக்கொள்வது பற்றி கவலைப்படாததுதான் மிகப்பெரிய சாதனை” என்று கேலி செய்துள்ளார். ‘ரஷீத் சனூக்’ என்று பெயருடன் ரிஷி சுனக் பாரம்பரிய அரபு உடையில் இருப்பது போல் சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தையும் சிலர் வெளியிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply