வடக்கு கிழக்கு அபிவிருத்திற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு அவசியம் : மஹிந்த சமரசிங்க
வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யும் பணிகளுக்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததென மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டை கட்டியெழுப்புதல் என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைகளை நிறைவுக்குக் கொண்டுவருதனை மட்டும் வெறுமனே சமாதானம் எனக் குறிப்பிட முடியாது எனவும், மனித விழுமியங்களின் மெய்யான மேம்பாடே சமாதானம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய முறுகல் நிலைகளை தவிர்க்கும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் மற்றும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply