ரூ.5 இலட்சம் கள்ள நோட்டுக்களுடன் பெண்ணும் சகாக்களும் கைது
ஐந்து இலட்சம் ரூபாய் கள்ள நோட்டிக்களுடன் பெண் ஒருவரை கெக்கிராவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிலிருந்து கள்ள நோட்டு அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். இந்தப் பெண் வழங்கிய தகவல் களின் அடிப்படையில் கள்ள நோட்டுக்களை அச்சிடும் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த மேலும் இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:-
கெக்கிராவ நகரிலுள்ள ஹோட்டல் ஒன் றில் தேனீர் அருந்தச் சென்ற பெண் ஒருவர் 2000/= ரூபாயை கொடுத்துள்ளார். அந்த நோட்டு தொடர்பாக ஹோட்டல் உரிமை யாளருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து அதனை சோதனையிட்டுள்ள அதே சமயம் குறித்த பெண்ணையும் மடக்கிப் பிடித்து கெக்கி ராவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.அந்தப் பெண்ணை கைது செய்த பொலி ஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை நடத்தியுள்ளனர். தனது வீட்டில் மேலும் கள்ள நோட்டுக்கள் மறைத்து வைத்திருப் பதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெண்ணின் வாக்குமூலத்தையடு த்து கெக்கிராவ, மலகடவல என்ற கிராம த்திலுள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் போலியாக அச்சிடப் பட்ட (2000) இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் 227யும் (இந்த போலி நோட் டுக்களின் பெறுமதி 4 இலட்சத்து 54 ஆயி ரம்) ஆயிரம் (1000/=) ரூபாய் கள்ள நோட் டுக்கள் 56 யும் (இந்த போலி நோட்டுக் களின் பெறுமதி 56 ஆயிரம்) மீட்டெடுத் துள்ளதுடன் கள்ளநோட்டு அச்சிட பயன் படுத்தப்பட்ட மை போத்தல்கள்–10, சிலி ன்டர்௬, வெள்ள நிறத் தாள்கள் மற்றும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர் என்றார்.
இந்தப் பெண் வழங்கிய மற்றுமொரு தகவலின் அடிப்படையில் இதற்கு ஒத்து ழைப்பு வழங்கி வந்த மேலும் இரு பெண் களையும் பொலிஸார் கைது செய்துள் ளனர். இதேவேளை, போலி நோட்டுக் களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கணனி மற்றும் ஏனை உபகரணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பான தகவல்களை பொலிஸார் திர ட்டி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச் சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply