1990இல் நடந்தவை திட்டமிட்ட கொலைகள் : நினைவுதின நிகழ்வில் துரைரட்ணம்
1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்துள்ளார். 1990ஆம் ஆண்டு சத்துருக்கொண்டான், கொக்குவில் மற்றும் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 186 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம் நேற்று நினைவுகூரப்பட்டது. நேற்று மாலை இறந்தவர்களின் நினைவுத் தூபி அருகில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், “அன்று நிகழ்ந்த இந்தப் படுகொலைகளை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இதற்கு யார் பொறுப்பு என்பதை மக்கள் மட்டுமல்ல சர்வ தேச சமூகமும் அறியும். இப்படுகொலைகளை சர்வதேச ரீதியில் அன்று அம்பலப்படுத்துவதைத் தடுப்பதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் முயன்றார்கள். இது தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்க முற்பட்டனர்” என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஏ.ரி.மாசிலாமணி, மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply