தொப்பிகலையில் புலிகள் புதைத்து வைத்த ஆயுதங்கள் மீட்பு
தொப்பிகலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புதைத்து வைத்திருந்த பெருமளவு ஆயுதங்களை இன்று காலை மட்டக்களப்பு விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர். தொப்பிகலை நகரமுல்ல அடர்ந்த காட்டுப் பகுதியில் மிகவும் பாதுகாப்பான முறையில் பொலித்தீனால் சுற்றப்பட்டு பூமிக்கடியில் இவ்வாயுதங்கள் புதைக்கப்பட்டிருந்தன. 52 ஆர்பீஜி ஷெல்கள், 12 T 56 ரக துப்பாக்கிகள், 300 துப்பாக்கி மகசீன்கள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படை தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் சரத் சந்திரவின் பணிபுரையின் பேரில் ,கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பி. எஸ். ரணவனவின் வழிக்காட்டலில், வலய தளபதி விமலசேனவின் ஆலோசனையின்கீழ், மட்டக்களப்பு தலைமையக விசேட அதிரடிப்படை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ். பி. குணரதன் தலைமையிலான விசேட அதிரடிப்படையினரே இவ்வாயுதங்களை மீட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply