தமிழக கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது

இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டுமென மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம்கொடுக்கும் நோக்கில், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழக கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது.
 
இலங்கையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தவேண்டுமென தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும் அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயும் நோக்கில் சட்டசபையில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் தமிழக முதலமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

எதிர்வரும் 4ஆம் திகதி தமிழக கட்சித் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்கவேண்டுமெனக் கோரிக்கை விடுக்க இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி இன்றையதினம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றுமொரு நாடகமெனக்கூறி இன்றைய கூட்டத்தை அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்திருந்தன.

இதேவேளை, கடந்த 17ஆம் திகதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் இலங்கையில் இடம்பெறும் வன்முறைகளையும், மோதல்களையும் கண்டித்து இன்று 25ஆம் திகதி தமிழகத்தில் முழுஅடைப்புப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply