தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவது குறித்து தமிழ் தேசிய கட்சிகள் மந்திராலோசனை

எதிர்வரும் தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவது தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று கூடி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டன.தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா மற்றும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கூடி இவ்வாறு கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது சிறந்த விடயமாக இருக்கும் எனவும், இந்த விடயம் தொடர்பில் சந்திப்பில் பங்கேற்ற கட்சிகள் கூடி இறுதி தீர்மானத்தை எட்டும் எனவும் நாடாளுன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply