டொலர் மூலம் வருமானம் உழைக்கும் நிறுவனங்கள் மாத்திரம் தற்போதைய நெருக்கடியிலிருந்து தப்ப முடியும் : மத்திய வங்கி ஆளுநர்
டொலர் மூலம் வருமானம் உழைக்க கூடிய நிறுவனங்கள் மாத்திரம் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்ப முடியும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.டொலர் உழைக்கும் நிறுவனங்களால் இறக்குமதி தட்டுப்பாட்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிக்க முடியும்,உள்நாட்டு பணவீக்கத்தை தோற்கடிக்க முடியும் என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாணயங்களில் உழைப்பவர்களால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியிலிருந்து தப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணியை உழைக்கும் தொழில் துறையினர் மாத்திரம் தப்பமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியை சாதகமாக பயன்படுத்தி அனைத்து வர்த்தகங்களும் தங்களை டொலர்களை உழைப்பவர்களாக மாற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply