நாய்க்கான தடுப்பூசி ஜேர்மன் பிரஜைக்கு வழங்கிய வைத்தியசாலை : இலங்கையில் சம்பவம்
நாய் கடித்த ஜேர்மன் பிரஜை ஒருவருக்கு நாய்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி ஊசி மூலம் செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த வாரம் ஜேர்மன் பிரஜைகள் குழுவொன்று கதிர்காமம் பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர். பயணத்தின் போது, வெளிநாட்டவர் ஒருவரை வீதியில் நாய் கடித்துள்ளது. இதற்காக சுற்றுலா வழிகாட்டியுடன் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கு வெளிநாட்டவர்கள் சென்றுள்ளனர்.
நாய் கடித்த ஜேர்மன் நாட்டவருக்கு சிகிச்சை நிலையத்தில் இருந்து நாய்களுக்கு போடப்படும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தவறான தடுப்பூசி போட்டதை அறிந்த வெளிநாட்டவர் மீண்டும் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சென்று நாய்கள் கடித்த பின்னர் பெறப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், மாத்தறை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகம் சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை நிலையம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என அதன் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும இது தொடர்பான விசாரணையில் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply