இலங்கையில் சாரதி, நடத்துனர்கள் இன்மையால் நாளாந்தம் 800 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை
சாரதி, நடத்துனர்களின் வெற்றிடங்கள் காரணமாக நாளாந்தம் 800 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலின்பேரில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும், அதற்கான ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுவரையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 1,200 பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply