மொட்டு சின்னத்திலேயே போட்டி : அறிவிப்பு விடுத்தது பொதுஜன பெரமுன கட்சி

உள்ளாட்சிசபைத் தேர்தலில் பொதுக்கூட்டணியின்கீழ் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது ஊடக சந்திப்பு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி அறிவிப்பை கட்சி பொதுச்செயலாளர் விடுத்தார்.

” உள்ளாட்சிசபைத் தேர்தலை முன்னிட்டு பரந்தப்பட்ட கூட்டணி அமைக்கப்படும். அவ்வாறு அமையும் கூட்டணிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தலைமை வகிக்கும். அதாவது எமது மொட்டு சின்னத்தின்கீழ் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு சில இடங்களில் மாற்று கட்சிகளின் சின்னத்தின்கீழ் மொட்டு கட்சி போட்டியிடக்கூடும்.

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிவிக்கப்படும்.” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply