ஆஷூ மாரசிங்கவின் நாயுடன் பாலியல் வீடியோ வெளியிட்ட ஆதர்ஷா முன் பிணை கோரி மனுத் தாக்கல்.

ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆதர்ஷா கரந்தன,  ஆஷு மாரசிங்க  செய்த முறைப்பாட்டுக்கு அமைய  தான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டால்,  பிணை அளிக்குமாறு கோரி முன் பிணை மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பேராசிரியர் ஆஷு மாரசிங்க செல்லப் பிராணியான நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் வீடியோ பதிவு ஆதர்ஷா கரந்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட பின்னர் வைரலாகியுள்ளது.

இந் நிலையில், ஊடகங்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்றும், இதற்காக செம்மைபப்டுத்தப்பட்ட காணொளி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பேரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தன்னைக் கைதுசெய்ய முயற்சிப்பதாக ஆதர்ஷா கரந்தன தனது முன் பிணை மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த  மனு செவ்வாய்கிழமை (ஜன.03)  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இதன் போது, சிஐடி பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப்பிரிவின்  பொறுப்பதிகாரி ஆகியோரை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டார். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply