பொதுத்தேர்தல் கூட்டு: ஜே.வி.பி. நிபந்தனை
எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து எந்தச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில்லையென ஜே.வி.பி. முடிவு செய்துள்ளதாகக் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
இவவாறானதொரு தீர்மானம் தமது கட்சியின் உயர் மட்டத்தினால் எடுக்கப்பட்டது உண்மையேயென ஜே.வி.பியின் முக்கியஸ்தரொருவர் உறுதிப்படுத்தினார்.
எதிர் காலத்தில் நடைபெறக் கூடிய பொதுத் தேர்தலொன்றில் நாம் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அது பற்றிக் கலந்தாலோசிக்கப்படுமென தெரிவித்த அவர், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச உட்பட 11 பேருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூலம்; பொதுத் தேர்தலொன்றில் போட்டியிட வாய்ப்பளிக்காத சந்தர்ப்பத்தில் மட்டுமே இது குறித்து ஆராயப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply