சீனப்பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் சரியே : உலக சுகாதார அமைப்பு

சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் ஆக்கி உள்ளன. இதை உலக சுகாதார நிறுவனம் நியாயப்படுத்தி உள்ளது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் காணொலிக் காட்சி வழியாக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கிருந்து முழுமையான தரவுகள் இல்லை. இந்த நிலையில் சில நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் என்று நம்பி எடுக்கிற நடவடிக்கைகள் சரியானவை, புரிந்துகொள்ளத் தக்கவை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply