ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நேற்று அரச இலக்கிய விருது விழா செங்கை ஆழியானுக்கு உயர் விருது வழங்கி கெளரவம்
அரச இலக்கிய விருது விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 2009ம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது தமிழில் 15 நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் உயர் இலக்கிய விருதான சாகித்திய ரத்னா விருது “செங்கை ஆழியான்” கலாநிதி க. குணராசாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய இவ்விழாவில் கலாநிதி க. குணராசாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாகித்திய ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார். அத்துடன் சிங்கள மொழி இலக்கியவாதி பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், ஆங்கில இலக்கியத்துக்காக பேராசிரியர் ஏஸ்லிஹெல்பேவுக்கும் ஜனா திபதியினால் சாஹித்திய ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவர்கள் மூவருக்கும் விருதுகளுடன் தலா 75,000ரூபா பணப் பரிசும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களமும் இலங்கை கலைக் கழக தேசிய இலக்கியக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 2009 அரச இலக்கிய விருது விழாவில் இம் முறை 15 தமிழ் நூல்களுக்கும் 25 சிங்கள நூல்களுக்கும் விருதுகளும் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்து டன் ஆங்கிலத்தில் ஏழு நூல்களுக்கும் சிறந்த அட்டைப் படம், சிறந்த நூல் வடிவமைப்பிற்கும் இப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழில் என்னை தீயில் எறிந்தவள் கவிதை நூலுக்காக அஷ்ரப் சிஷாப்தீனும் வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து கவிதை நூலுக்காக நீ. பி. அருளானந்தமும் விருதுகளைப் பெற்றனர். சிறுகதை நூலுக்காக ஓட்டமாவடி அரபாத்தும் அ. செ. பாய்வாவும், நாவலுக்காக அக்ஸ் எம். பாயிஸும் வவுனியூர் இரா உதயனனும் விருதுகளைப் பெற்றனர்.
நாடக நூலுக்காக எஸ். முத்துக்குமரன், கலைஞர் கலைச் செல்வன் ஆகியோரும் சிறுவர் இலக்கியத்துக்காக ஓ. கே. குணநாதன், ஸி. எம். ஏ. அமீனும் நானாவித இலக்கிய த்துக்காக வண. கலாநிதி இ. எஸ். ஏ. ஐ. மத்தியூ, எஸ். தில்லைநாதன் ஆகியோரும், மொழிபெயர்ப்பு இலக்கிய த்துக்காக சரோஜினி அருணாசலம், மடுளுகிரிய விஜேரத்ன, திக்குவெல்லை கமால் ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர்.
அமைச்சர்களான மஹிந்த யாப்பா அபேவர்தன, பியசிறி விஜேநாயக்க, பிரதியமைச்சர் வீ. புத்திரசிஹா மணி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிவைத்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply