அமெரிக்காவில் கலிபோர்னியாவை புரட்டிபோட்ட மழை : 17 பேர் பலி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத அளவு கன மழை பெய்தது. அங்கு பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து துண்டாகின. கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. அனைத்து சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மழை-வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கலிபோர்னியா மாகாணத்துக்கு மேலும் மழை ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கவர்னர் கெவின் நியூசோம் கூறும்போது, மழை-வெள்ளம் காரணமாக 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆபத்து இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாதிப்பு குறைந்தபட்சம் வருகிற 18-ந்தேதி வரை தொடரும் என்று தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply