பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒரே வாய்ப்புதான் உள்ளது: இலங்கை அதிபர் ரணில்
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை வரலாறு காணத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டில் அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டது. இதனால், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளுடன் ஆதரவுடன் இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி வகித்து வருகிறார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை அவர் முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் இலங்கையில் தொழிற்சங்கங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசிய ரணில் விக்ரமசிங்கே அப்போது கூறியதாவது: – இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து இருப்பது நாங்கள் அனைவரும் அறிவோம்.
எனவே நாடு எதிர்கொண்டுள்ள சிரமங்களையும் நன்கு அறிவேன். தொழிலாள்ரளின் எண்ணிக்கையும் சரிந்து விட்டது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கை செலவு உயர்ந்துள்ளது. இதனால், அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. பொருளாதார பிரச்சினைக்கான மூலக்காரணம் என்பது பற்றி பேசுவது பயனற்றது. தற்போது இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியை பெறுவது மட்டுமே. இல்லாவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மால் மீள முடியாது” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply