கிளாலியில் புலிகளின் வாகனம் மீது படையினர் தாக்குதல்: பலர் பலி
இராணுவத்தினரால்; அண்மையில் கைப்பற்றப்பட்ட கிளாலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வாகனம் ஒன்றின் மீது பாதுகாப்புப் படையினர் இன்று காலை தாக்குதலை மேற்கொண்டதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இந்தத் தாக்குதலின் போது அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டதாக அவர்களின் வானொலித் தொலைத் தொடர்பு செய்திப் பரிமாற்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது.
இந்தப் பிரதேசத்தில் படையினர் நடத்திய சோதனையின் போது ரி௫6 ரக துப்பாக்கிகள் இரண்டு,ஆர்பிஜி லோஞ்சர் ஒன்று, பாகாப்புக் கவசம் ஆகியனவையும் கைப்பற்றப்பட்டதாக ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply