ஜனாதிபதி நாளை வாகரைக்கு விஜயம் செய்யவுள்ளார்

ஐரோப்பிய யூனியனின் நிதி உதவியுடன் ரூபா 300 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட வாகரை மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை வைபவ ரீதியாக திறந்து வைக்கவிருக்கின்றார்.மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மகா வித்தியாலய திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை அங்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

2004ஆம் ஆண்டு சுனாமியின் போது வாகரை மகா வித்தியாலயத்தின் கட்டிடத் தொகுதிகள் சேதமடைந்திருந்தன. சுனாமி மீள் கட்டுமான திட்டத்தின் கீழ் இவ்வித்தியாலய புனரமைப்பு பணிகளுக்கான உதவிகளை வழங்க ஐரோப்பிய யுனியன் முன்வந்திருந்தது. புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சு இணைந்து ஐரோப்பிய யுனியனின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடசாலை கட்டிடத் தொகுதி, நவீன தொழில் நுட்பத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முன்மாதிரி பாடசாலையாக அமைந்துள்ளது என ஐரோப்பிய யுனியன் தெரிவிக்கின்றது.

இம்மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை கல்வி பயிலும் 700இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயன் பெறுவார்கள். முழுமையான வசதிகளுடன் நூலகம், விஞ்ஞான ஆய்வு கூடம், கணினி பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக் கூடங்களுடன் மொழி வள நிலையம், விளையாட்டு மைதானம் ஆகியன வித்தியாலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வித்தியாலக் கட்டிடத் திறப்பு விழாவில் ஐரோப்பிய யுனியனின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மத்திய தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் உட்படப் பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply