ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நிஷாந்த பொலிஸாரால் கைது
தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் நிஷாந்த முத்துஹெட்டிகம நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.காலி மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடும் இவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபருக்கும், பொலிஸாருக்கும் எதிராகக் கருத்துத் தெரிவித்தமையால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.
இவரைக் கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதே நேரம், பொலிஸார் மீது வேட்பாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யவென பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன, விசேட புலனாய்வுக் குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தக் குழு விசாரணை நடத்தவென நேற்று காலிக்குச் சென்றிருந்தது.வேட்பாளர் நிஷாந்த, அதே கட்சியில் போட்டியிடும் பிரபல நடிகை அனார்க்கலி ஆகர்ஷாவுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என அவர் மீது நடிகை பொலிஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய பொலிஸார் செயற்பட்டு நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய நிஷாந்த, பொலிஸ் தம்மிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதாகக் கூறி தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸாருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply