ஓரணியில் திரண்டால் இழந்த அனைத்தையும் மீளப் பெறலாம்: அமைச்சர் டக்ளஸ்

நாம் அனைவரும் ஓரணியில் திரண்டால் நாம் இழந்த அனைத்தையும் ஒரு சில வருடங்களில் மீளப் பெறலாம்; என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.யாழ். குருநகர் – கொழும்புத்துறை கடற்கரை வீதியை மக்களின் போக்குவரத்துக்காக நேற்று திறந்து வைத்து உரை நிகழ்த்தியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இன்றைய தினம் படைத் தரப்பினரதும், அரச உயர் அதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன் இந்த வீதியை மக்களின் போக்குவரத்திற்காகத் திறந்து வைப்பதில் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதுடன், மக்கள்; சார்பில் ஜனாதிபதிக்கும் படைத்தரப்பினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே கடற்றொழிலாளர்களுக்குத் தொழிலில் ஈடு படுவதற்கு 24 மணி நேர அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வழங்கியுள்ளது.  இவ்வாறானதொரு சூழ் நிலையை, ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினரும் எமது மக்களும் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனர்.

கடந்த 30 வருடங்களாக எங்களை நாங்களே அழித்துக்கொண்ட நிலையை முழுமையாக மாற்ற வேண்டும் எனில், நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். அத்தகையதொரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், நாம் இழந்த அனைத்தையும் ஒரு சில வருடங்களில் மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் யாழ். கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், படை அதிகாரிகள், பிரதேச செயலாளர், மாநகர முதல்வர், உதவி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply