பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை : கர்தினால் மெல்கம் ரஞ்சித்

அரசியல்வாதிகள் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு தாங்கள்தான் முதலாளி என நினைப்பதாகத் தெரிகிறது என கொழும்பு, கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை என பேராயர்கள் தெரிவித்துள்ளனர். நீதிக்காக போராடுவது முக்கியமானது எனவும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் என்ன நடந்தது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை என்றும், மக்கள் பல விஷயங்களைச் சொல்கிறார்கள் என்றும், அதனால்தான் நீதிக்காகப் போராடுவது முக்கியம் என்றும் பேராயர் கூறினார்.

சிலர் மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றும் இருக்கும் முறையை தொடரட்டும் என்று கூறினாலும் இளைஞர்கள் போராடி இலங்கையின் அரசியல் மாதிரியை மாற்றினார்கள் என்றும் கர்தினால்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply