விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் போர்நிறுத்தமொன்றுக்குச் செல்லத் தீர்மானம்: ஐக்கிய தேசியக் கட்சி

இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்தமொன்றுக்குச் செல்லத் தீர்மானித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். 
 
விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பாக இந்தியா உத்தரவாதம் வழங்குமாயின் இலங்கை அரசாங்கம், புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வதில் தமக்கு ஆட்சேபனையில்லையென ஜாதிக ஹெல உறுமய கூறியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய கிரியல்ல, அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜாதிக ஹெல உறுமயவின் ஊடாக வெளிக்காட்டப்பட்டிருப்பதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது பேச்சுவார்த்தையொன்றுக்கு விரைவில் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலும், பாராளுமன்றத்திலும் கிரியல்ல குறிப்பிட்டார்.
2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொண்டபோது எதிர்த்த அரசாங்கமும், ஜாதிக ஹெல உறுமயவும் தற்பொழுது விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்தம் செய்ய முன்வந்திருப்பதாக அவர் கூறினார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக தீர்வொன்று முன்வைக்கப்படும் என அரசாங்கம் கூறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாத சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக எவ்வாறு நியாயமான தீர்வை அரசாங்கம் முன்வைக்கும்” என லக்ஷ்மன் கிரியல்ல கேள்வியெழுப்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply