வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு மத்தியில் அமெரிக்கா-ஜப்பான் : தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி

வடகொரியா-தென் கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இதில் மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்தது. வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.

இதனால் கொரியா தீப கற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் சர்வதேச கிழக்கு கடல் பகுதியில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடு கள் இணைந்து முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்கவும், அதற்கு பதிலடி கொடுக்கவும் கூட்டுப் போர் பயிற்சி நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுப் பயிற்சியில் மூன்று நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்று இருக்கின்றன.

இதில் ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணையின் இலக்கை கண்டறிந்து கண்காணிப்பதற்கான பயிற்சி நடந்தது. இது தொடர்பாக தென் கொரிய கடற்படை கூறும்போது, வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டு ராணுவ பயிற்சி ஒரு வாய்ப்பாகும்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு பதிலடி கொடுப்பதை எங்கள் கடற்படையின் திறன்கள் உறுதிப்படுத்துகிறது. இந்த முத்தரப்பு ஒத்துழைப்பானது எங்களின் மதிப்புகளை பிரதிபலிப்பதுடன் மண்டல நிலைத்தன்மைக்கு சவாலாக இருப்பவர்களுக்கு எதிரான தீர்மானத்துடன் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply