சூடானில் 24 மணி நேரம் போர் நிறுத்தம்: இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது.
அதிரடி ஆதரவு படைகள் என அழைக்கப்படும் துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமுக முடிவு ஏற்படவில்லை. இந்தநிலையில், தாகுதல் நடக்கும் இடத்தில் இருந்து சூடானியர்கள் வெளியேறி செல்கின்றனர்.
இந்தியர்கள் உள்ளிட்டோர் எங்கு செல்வது என தெரியாமல் திணறி வருவதாகவும் மத்திய அரசு உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் உணவு, தண்ணீர் இல்லை, தங்கியிருக்கும் இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கர்தூம் நகரில் சிக்கி உள்ளதாக இந்தியர்கள் தகவல் தெரிவித்துள்ள்னார், சூடானில் ராணுவம், துணை ராணுவத்தினர் ஆங்காங்கே குழுக்கள் குழுக்களாக சண்டையிட்டு வருகின்றனர்.சூடானில் ராணுவம், துணை ராணுவம் ஆங்காங்கே குழுக்கள் குழுக்களாக சண்டையிட்டு வருவதால் பதற்றமான சூழல்நிலை நிலவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply