யாழ்.நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலை அமைச்சரின் டக்ளஸின் அதிரடி நடவடிக்கை
யாழ்.நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் இந்த கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் தீர்க்க வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மரண விசாரணை அதிகாரிகளும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் தங்கியிருந்த ஐவர் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply