புலிகளை தேடும் பணியில் தமிழக காவல்துறை தீவிரம்.
தமிழகத்தின் தென்பிரதேசங்களான ராமேஸ்வரம், தூத்துக்குடி, தனுஷ்கோடி மற்றும் நாகபட்டினம் போன்ற கடற்பிரதேசங்களில் ஊடுருவியிருப்பதாக நம்பப்படும் புலிகளைத் தேடும் வேட்டை தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
24 மணிநேர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுத்த 5 இந்தியா யுத்தக் கப்பல்கள் அப்பிரதேசத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், பொலிஸார் 24 மணிநேர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை கம்பிப்பாடு பிரதேசத்தில் படகு ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இப்படகில் 4 துப்பாக்கிச் சூட்டு அடையாளங்கள் காணப்பட்டதாகவும் மற்றுமொரு படகு கடந்த சனிக்கிழமை காலை தனுஷ்கோடியில் கரையொதுங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் படகில் வந்தவர்கள் தொடர்பான விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply