ஓமந்தை சோதனைச் சாவடியைக் கைவிட்டு ஓட்டுசுட்டானுக்கு பின்நகர்ந்த புலிகள்.
ஓமந்தையில் இதுவரை காலமும் இயங்கி வந்த புலிகளில் சோதனைச் சாவடியை அவர்கள் அங்கிருந்து அகற்றி ஒட்டுசுட்டானுக்கு மாற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
ஓமந்தை சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதிவழியாக கிளிநொச்சிக்கும், ஓமந்தை சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதிவழியாக மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் வழியாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் போக்குவரத்துக்கள் நடைபெற்று வந்தன.
ஆயினும் முறிகண்டி, கொக்காவில் பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறத் தொடங்கியதையடுத்து, இந்தப் பிரதேசங்களின் ஏ9 வீதியில் எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடிக்கத் தொடங்கியனதால், கிளிநொச்சிக்கான போக்குவரத்தும், மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் வழியாக முல்லைத்தீ்வு மாவட்டத்தின் ஊடாக நடைபெற்றது.
சுமார் இரண்டு வாரத்திற்கு முன்னர், மாங்குளம் – ஒட்டுசுட்டான் வீதி வழியாக வன்னிப்பிரதேசத்திற்குச் செல்வதற்குப் பதிலாக ஓமந்தைக்கு வடக்கே அடுத்துள்ள இடமாகிய புளியங்குளத்தில் இருந்து நெடுங்கேணிக்குச் சென்று அங்கிருந்து ஒட்டுசுட்டான் ஊடான வீதியைப் பயன்படுத்துமாறு இராணுவம் அறிவித்திருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.
கடந்த வாரம், புளியங்குளத்திலிருந்து புலிகள் வெளியேறி விட்டதால் எதுவித மோதலுமின்றி ஓமந்தையிலிருந்து படையினர் புளியங்குளம் சந்திக்கு சென்றுள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவித்த நிலையில், புலிகள் தமது சோதனைச் சாவடியை ஒட்டுசுட்டானுக்கு பின்நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply