இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஐ.தே.க. 60 நாட்கள் மறுசீரமைப்புத் திட்டம்

பொதுத் தேர்தலொன்றை எதிர்கொள்ளும் வகையில் 60 நாட்களுக்குள் கட்சியை அடிமட்டத்திலிருந்து மறுசீரமைக்கும் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. 
 
60 நாட்களுக்குள் கட்சியை மறுசீரமைக்கும் செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். இந்த 60 நாட்களுக்குள் கட்சியின் அடிமட்டத்தில் 10,000 கிளைகள் நிறுவப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் விரைவில் அரசாங்கமொன்றை அமைக்கவேண்டும். அரசாங்கமொன்றை அமைப்பதற்கு எமது கட்சியின் உழைப்பாளிகள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்” என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கூறினார்.

இதேவேளை, மோசமடைந்துசெல்லும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாத அரசாங்கம் இடைத்தேர்தலொன்றுக்குச் செல்ல முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொருளாதார நெருங்கடி ஏற்பட்டுள்ளது என நாம் முன்னர் எச்சரித்தபோது எவரும் அதனைக் கவனத்தில்கொள்ளவில்லை, தற்பொழுது அதனை உணர்ந்துள்ளனர் என்றார் எதிர்க்கட்சித் தலைவர்.

உண்மைகளை எழுதும், தெரிவுக்கும் ஊடகவியலாளர்களைத் தமது கட்சியே பாதுகாத்து வருவதாகக் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைப்பற்றி எழுதினால் தமக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமென அவர்கள் அச்சமடைந்துள்ளனர் எனக் கூறினார்.

உண்மையைப் பேசவேண்டும், அல்லது செத்துமடியவேண்டிய காலம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, உண்மையைப் பேசுவதற்கு ஊடகவியலாளர்கள் அஞ்சக்கூடாது எனவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply