பரந்தன், பூநகரி, வற்றாப்பளை உட்பட பல பிரதேசங்களுக்கு இன்று மின்சாரம்
பரந்தன், பூநகரி வற்றாப்பளை உட்பட பல பிரதேசங்களுக்கு இன்று மின்சார வசதி அளிக்கப்பட உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. இந்தத்திட்டத்திற்காக 60 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 30 வருட மோதல் காரணமாக வட பகுதியிலுள்ள பல கிராமங்கள் மின்சார வசதியின்றி காணப்பட்டதோடு, உப மின்நிலையங்கள், மின்சார கோபுரங்கள் என்பன சேதமடைந்திருந்தன. வடக்கு வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வடக்கில் மின்சார வசதியற்ற சகல கிரா மங்களுக்கும் மின்சார வசதியளிக்க மின் சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
பரந்தன் நகரின், பூநகரில் நகரம், மன்னாரின் நொச்சிக்குளம் பிரதேசம், முல்லைத் தீவின் வற்றாப்பளை பகுதி மற்றும் வவுனியாவில் உள்ள இரு கிராமங்கள் என்பவற்றுக்கு இன்று மின்சார வசதி அளிக்கப்படவுள்ளதாக வடக்கு வசந்தம் மின்சாரத் திட்டப் பணிப்பாளர் கிரேசன் முதுகுடாராய்ச்சி கூறினார்.
ஏற்கெனவே கிளிநொச்சி நகரம், முல்லைத்தீவு நகரம், ஒட்டு சுட்டான் மற்றும் நெடுங்கேணி ஆகிய நகரங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிப்பதற்காக 3 வருட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு 11 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது.
வடக்கிலுள்ள கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கும் வைபவத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, வடக்கின் ஜனாதிபதி செயலணிக் குழு தலைவர் பெசில் ராஜபக்ஷ மின்சார சபை உயரதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply