வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து 355 குடுமபங்கள் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களில் ஒரு தொகுதியனர் இன்று விடுவிக்கப்பட்டு மீள் குடியேற்றத்திற்காக இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பஸ் வண்டிகளில் இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்ட இக் குடும்பங்கள் இன்று நண்பகலும் நேற்றிரவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சென்றடைந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 355 குடும்பங்களைக் கொண்ட 941 பேர் நேரடியாக சிங்கள மகா வித்தயாலத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு பொலிஸ் இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளினால் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் பிரதேச செயலாளர்கள் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு உறவனர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 80 குடும்பங்களைக் கொண்ட 250 பேர் காரைதீவு விபுலானந்தா வித்தியாலயத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டு இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.
கடந்த முறை இரண்டாவது தொகுதியில் 11.09.2009 ல் ஆழைத்து வரப்பட்ட 169 குடும்பங்களைச் சேர்ந்த 497 பேர் இரண்டு முதல் ஐந்து வாரங்கள் வரை இம் மாவட்டங்களிலுள்ள இடைத்தங்கல முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பின்னரே இருப்படங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply