தெஹிவளை மேம்பாலத்தை ஜனாதிபதி இன்று திறந்துவைத்தர்

தெஹிவளை சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை திறந்து வைத்தார். பிரித்தானியா அரசாங்சத்தின் உதவியில் 920 மில்லியன் ரூபா செலவில் இம்மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பப் பணிகள் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி தொடக்கிவைக்கப்பட்டன. 7.35 மீற்றர் அகலம் கொண்ட இப்பாலத்தின் நீளம் 337 மீற்றர்களாகும்´மக நெகும´ திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் இவ்வாறான 222 மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் பாலம் களனியில் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி திறந்து  வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய திறப்பு விழா நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் பீற்றர் ஹெய்ஸ், அமைச்சர்களான ரி.பி.ஏக்கநாயக்க, சுசில் பிரேமஜயந்த, ஏ.எச்.எம்.பௌசி, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் வசந்த கன்னங்கொட ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply